அப்பத்தா

என்னோட அப்பா வழி பாட்டிய அப்புதா இல்ல அப்பத்தா னு கூப்படும் போது, ஒரு சந்தோசம் மனசுல. எனக்கு நெனவு தெரிஞ்ச நாளுல இருந்து அப்பத்தா னா, எனக்கு ரெம்ப இஷ்டம். எங்க அப்பத்தாக்கு, மூத்த ஆண்பிள்ளை பசங்க னா கொள்ளை பிரியம்! எப்படா இந்த பரீட்சை எல்லாம் முடியும், அப்பத்தா கூட போயி ஒரு வாரம் இருக்கனும் னு மனசு சொல்லிடே இருக்கும்.  முழு பரீட்சை லீவ்க்கு ஊருக்கு போனா, ஒரு பதினைந்து நாலு , நல்லா ஜாலி யா கொண்டாடலாம்.

என் அப்பத்தா, எங்களை வயலுக்கு கூட்டிட்டு போவாங்க, கண்மாய்ல ஆட விடுவாங்க, இளநீர் வெட்டி தருவாங்க…. இது போதாதுன்னு, சுடுற வெயில்ல, மந்தைக்கு போய் டீ வாங்கிட்டு வருவாங்க. டீ நல்லா இருக்கோ இல்லையோ, அப்பத்தா பண்றது எல்லாமே ரொம்ப  நல்லா இருக்கும். அப்பத்தாட்ட, ஒரு பெட்டகம் இருந்துச்சு, அதுல நெறைய பழைய காசு இருந்துச்சு. எனக்கு பழைய காசு சேக்குற பழக்கம் வளர்றதுக்கு …அவுங்களும் ஒரு காரணம்.

அப்பத்தா, எப்ப மெட்ராஸ் வந்தாலும், கைல ஒரு பெரிய மஞ்ச பை எடுத்துட்டு வருவாங்க…கூடவே ஒரு தூக்கு சட்டி நெறைய அதிரசம். இது போதாதுன்னு ஒரு பப்பாளி, கடலை னு நெறைய தின்பண்டன்களோட வருவாங்க. ஸ்கூல் விட்டு வந்து, இத எல்லாம் டீ ஓட சாப்பிட்டா, ரொம்ப சுவையா இருக்கும்.

எங்க போனாலும் நடந்தே போவாங்க, வாங்க அப்பத்தா ஆட்டோ ல போலாம் னு சொன்னாலும் கேக்கவே மாட்டாங்க. தைரியமான, திடமான, உறுதியான மனுசி என் அப்பத்தா. அப்பத்தா  ஊருக்கு போகும் போது, நான் சேத்து வச்ச காசுல இருந்து அஞ்சு ரூபா குடுப்பேன். எனக்கு அதுல ஒரு சின்ன திருப்தி.

அப்பா இறந்தப்ப, அப்பத்தா  கதறி அழுதது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னய கொண்டு போகம, என் மயன கூட்டிட்டு போயிட்டானே னு பொலம்புனாங்க….

அப்பத்தா, கூட இப்டியே பல வருஷம் ஓடிடிச்சு. இப்போ எனக்கு நேரமே இல்லை …. ஊருக்கு போயி அப்பத்தாவ  பாக்கவே நேரம் கிடைக்கல! வேலை வேலை னு சுத்த ஆரம்பிச்சுட்டேன் …அவுங்களா மெட்ராஸ் வரும் போது அந்த வாரமே எனக்கு நிம்மதியா இருக்கும். சாப்ட தட்ட கூட எடுக்க விடமாட்டாங்க …. சாப்ட்டு  கை களுவுன வுடன… அவுங்க கண்டாங்கி சேலைய  கை துடைச்சுக்க குடுப்பாங்க….. அப்ப கூட இந்த பாழா போன புத்திக்கு, அவுங்களுக்கு ஒரு சேலை வங்கி குடுக்கணும் னு தோனல….

இப்படி நல்லா இருந்த அப்பத்தா, ஒரு நாள் திடீர்னு  மழை தண்ணில வழுக்கி விழுந்து தொடை எழும்ப உடச்சுகிட்டாங்க… மரண வலியா  இருந்து இருக்கும்… ஆனா  விழுந்தவங்க புத்தி பேதலிச்சுடுச்சு. எங்க யாரயுமே அவுகளுக்கு அடையாளம் தெரியலை. ஆபரேஷன் பண்ணி , முப்பது நாளுக்கு மேல ஆஸ்பத்திரில வச்சு இருந்தோம்… ஒரு ப்ரோயோஜனமும்  இல்லை… அப்பத்தா…அவுங்களோட கடைசி சில நாட்களுக்கு வந்துட்டாங்க…

ஆபீஸ்ல  உட்காந்து , உலகத்தோட அந்த மூலைல இருக்கவன சந்தோஷ படுத்திட்டு இருந்த எனக்கு, கிட்ட இருந்த என் செல்ல அப்பத்தா… இறக்குற நெலமைல தான் தெய்வமா கண்ணுக்கு தெரிஞ்சங்க…

மார்ச் 7  ஆம் தேதி 2006  ஆம் வருஷம், அவுங்க எங்கள விட்டு போயிட்டாங்க… மயானத்தில, அவுங்களா எரிச்சுட்டு எல்லாரும் போயிட்டாங்க… நானும் என் ரெண்டாவது தம்பியும், ஒரு சின்ன சந்தன கட்டைய, அவுங்க உடம்பு மேல வச்சோம். அவுங்க உடம்பு முழுசும் ஆண்டவண்ட போறதா பாத்துட்டு …வீட்டுக்கு வந்து தனியா ரெம்ப நேரம் அழுதேன்… அவுங்களா இன்னும் ரெம்ப ராணி போல பாத்து இருக்கனும்னு தோனுச்சு ….மனசுல ஒரு போராட்டம் நடந்துச்சு…

அப்பத்தா, வருஷ வருஷம், என் கனவுல வருவாங்க… அவுங்க இன்னும்  போகலை….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s