அது ஒரு காலம்

அது ஒரு காலம், சும்மா அவ வீட்டுக்கு சூரியன் சாயும் காலமா போவேன். அவ, பாக்க சின்ன பொண்ணாட்டம் இருப்பா! குட்டைய, நெறய முடியோட, லட்சணமா… இருப்பா! அவ அப்பா அம்மா, ரொம்ப நல்லா பேசுவாங்க. அவ அப்பா என்னைய திருக்குறள் னு களாய்பாரு. ஒரு விசயத்த பத்தி பேசினோம்னா, ரெண்டு மூணு மணி நேரம் பேசுவோம்.

அவரு எப்பெல்லாம் என்னைய திருக்குறள் னு சொல்றாரோ, அப்பெல்லாம் எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி. நான் தான் திருக்குறள் ஒப்பிக்கவே இல்லையே.. அட நம்ம தமிழ் மிஸ் என்னைய உதைக்காத குறை….

சரி சரி, அவ வீட்டுக்கு போனோம்னா, நல்லா ஜம்முனு ஒரு காபி போட்டு தருவா… அவளுக்கு என்னை பிடிக்கும், நல்லா காமெடி பண்றான் பாரு னு சொல்லுவா. சில பேரு என் முக வெட்ட வச்சு, இவன் நாகேஷ் னு சொல்லுவாங்க. அவளும் அப்படி தான்…

நல்ல படிப்பா… விழுந்து விழுந்து தொண்ணூறு மார்க் வாங்குவா!. இதெல்லாம் எதுக்கு னு எனக்கு தோணும்!. எப்பவாவது சின்னதா சிரிப்பா, மத்த நேரம், கள கள னு அண்டால கோலி குண்ட போட்டு உருட்டின எப்படி சத்தம் வருமோ, அப்படி சிரிப்பா….

காலேஜ் பஸ், ரெண்டு பேருக்கும் … ஒரே எடத்துல இருந்து கிளம்பும். அந்த பத்து நிமிஷம் நாங்க பேசும் போது, மத்த பசங்களுக்கு அது பத்து வருஷம் போல இருக்கும். சும்மா விஷயம் தெரியாத அரை வேக்காடு பசங்க, பேசினாலே கதைய கட்டி விட்ருவானுங்க!

அவுங்க வீடு ஒரு FORUM மாதிரி. எல்லாரும் அங்கேயே சந்திச்சுபோம்.
சில வருஷங்கள், உருண்டுச்சு. கல்யாணம் அவளுக்கு… சின்னதா ஓரு கிப்ட் ஓட போனேன். நல்ல சாப்பாடு….அவ கல்யாணத்துக்கு அப்புறம், அவள பாக்கவே இல்லை.

என் கல்யாண பத்திரிக்கை குடுக்கும் போது திரும்ப பாத்தேன். பேச எல்லாம் நேரம் இல்லை. கண்டிப்பா வந்துரு னு சொன்னேன். அவளும் கண்டிப்பா வருவேன்னு சொலிட்டு வரலை. அட எல்லாருக்கும் வேலை இருக்கும்.

ஆண் பெண் நட்பு, கல்யாணம் ஆனாவுடனே முடியும்னு சொல்றதெல்லாம் அந்த காலம்.

அவ, எனக்கு இன்னும் நல்ல நண்பி! இப்பவும் பழசெல்லாம் பேசினா பசுமையா இருக்கும்!… பேசுறோம், பேசிட்டே இருக்கோம்… பேசுவோம்…

Advertisements