அத்திலி பித்திலி

அத்திலி பித்திலி,
மக்கா சுக்கா,
பால் பரங்கி,
லாட்டும சூட்டும,
சீ சள்ளோடு.

இத எதுக்கு பாடுவாங்கனு, மறந்து போச்சு. ஞாபக படுத்தி எழுதுறேன்.

Advertisements

குச்சி உருட்டுதே

தேவை:மூன்று பேர் அல்லது அதற்க்கு மேல். ஒரு சின்ன குச்சி, கைக்குள்ள அடங்குர அளவுல.

சாட் பூட் த்ரீ போட்டு ஒருத்தர தேர்வு செஞ்சு. அவர குனிய வச்சு, எல்லாரும் அவரு முதுகு மேல கைய வட்சுகனும்.

அதுக்கம் பழம், மிதுக்கம் பழம்,
யாரடிச்சா எவரடிச்சா?
குச்சி உருட்டுதே…குச்சி உருட்டுதே…

அப்டின்னு பாடிக்கிட்டே… யாரு கைலயாவது  குச்சிய குடுத்துரனும்.

இப்ப குனிஞ்சு இருக்கிறவர், நிமிர்ந்து பாத்து … யாரு கைல குச்சி இருக்குனு கண்டு பிடிக்கணும்.

மத்த எல்லாரும், கைல குச்சி இருக்கிறது மாதிரியே கைய தேச்சு “குச்சி உருட்டுதே…குச்சி உருட்டுதே” னு .. பாடனும்.

இப்படி பாடிகிட்டே  இருந்தா, விளங்கிடும்!

குத்து குத்து

இத விளையாட ரெண்டு பேரு போதும்.

ஒருத்தர் கைய கேட்ச் பிடிக்கிறது மாதிரி வச்சுகனும்.ரெண்டாதவர்,

குத்து குத்து,
கும்மாங் குத்து,
பிள்ளையார் குத்து,
பிஞ்சு குத்து,
பிடி குத்து.

என்ற  பாட்ட, பாடி கிட்டே முதலாமவர் கைல குத்தனும். பிடி குத்துனு சொல்லும் போது முதலாமவர், ரெண்டாதவர் கைய பிடிக்கணும். பிடிக்கலைனா, அவரு தோத்து டாருனு அர்த்தம்.

வேலை வெட்டி இல்லேன்னா, பெரியவங்க கூட இத விளையாடலாம்.

சங்கு சக்கரம்

இதுக்கு மூணு பேருக்கு மேல இருந்தா நல்ல விளையாடலாம். எல்லாரும் ஒரு வட்டமா உட்காந்துட்டு, “சங்கு, சக்கரம், இந்து, நாகம், பால்” இதுல எதாவது ஒரு பேர தேர்ந்து எடுத்துக்கணும்.

இப்ப முதல்ல இருக்கிறவங்க , அடுத்தவங்க விரல சங்கு, சக்கரம், இந்து, நாகம், பால்’ னு சொல்லி எண்ணிகிட்டே வரணும். அவுங்க முடிக்கும் போது, யாரு என்ன பேரு நினச்சு இருந்தன்களோஅவுங்க ஆட்டதுல வெற்றி பெற்றுட்டாங்க. இது போல கடைசி வரை எண்ணனும். முடிக்கும் போது யாரு மிச்சம் இருகாங்களோ, அவுங்கள மத்தவங்க, செம பிரி ( அடி தான்) பிரிப்பாங்க.

சாட் பூட் த்ரீ

எந்த ஒரு விளையாட்டு நாளும், சாட் பூட் த்ரீ போட்டு தான் யார தேர்ந்து எடுக்கணும்னு முடிவு பண்ணுவோம். இதுல செட் சேந்துகிட்டு, மத்தவங்கள மாட்டி விடுறது ஒரு அலாதி இன்பம்.

இதுக்கு குறைந்த பட்சம் மூணு பேரு தேவை. ஒருத்தர்  கை மேல ஒருத்தர் கை’னு மூணு பேரும் வச்சுகிட்டு – சாட் பூட் த்ரீ’னு சத்தமா சொல்லுவோம். இப்படி பண்ணி ஒருத்தர முடிவு பண்ணலாம். இதுவே ஐந்து அல்லது ஏழு அல்லது ஒத்தை படைல இருக்கிற கூட்டத்த கொறச்சு ஒரு ஆள ஆக்கிடலாம்.