நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ப்ராஜெக்ட் மேனேஜர் :     நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ப்ராஜெக்ட் லீட்:  நல்ல சூடு ஒரு மாட்டுக்கு (எதாவது புரியுது ? )

டெக் லீட் :  பழுக்க காச்சின ஒரு கம்பிய எடுத்து … நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடணும்… சூடு தழும்பு … மினிமம்  மூணு இன்ச் இருக்கனும்…

டீம் லீட் : தம்பி…. நல்ல மாடு  ஒன்னு  வாங்கணும்… அதுக்கு  மூக்குநாங் கயிறு  போடணும்…. அப்றோம் சூடு கூட போடணும் னு  பேசிக்கிரங்கயா … பாப்போம்….. போயா போயா … போயி டைம் சீட் பில் பண்ணுயா

டெஸ்டிங்  டீம்:   இது நல்ல மாடா?   நல்ல மாடு எப்டி இருக்கும்…?   இது மாடு தானா  ?  இந்த மாடு பால்  குடுக்குமா? …

டீம் மெம்பெர் : நல்ல மாட்டுக்கு …எதுக்கு சார் சூடு போடணும்?

Advertisements

Status Message

இந்த Status message போடுற பசங்க, ரூம் போட்டு யோசிப்பாங்களோ ‘னு தோணுது ? இந்தியா ல இருக்குற வரைக்கும் ஒழுங்கா இருக்கானுங்க. வெளி நாட்டுக்கு போன வுடனே வெள்ளை காரனுங்கள ஆயிடுரனுங்க Wassup, Dude, Howdy, Catch ya…’னு பேசுறானுங்க.

அட அது பரவாயில்லை,இங்க பிஞ்ச தோசைய தின்னுட்டு இருந்தவங்க, அங்க போயி… pizza இல்லாம உயிரோட இருக்கவே முடியாத மாதிரி “Missing Pizza” னு status போடுறாங்க…

இந்த மெசேஜ் போடுற பசங்கள்ள பல ஜாதி,ரகம் உண்டு….. என்ன போடுறோம் ஏது போடுறோம்னு அவனுக்கே தெரியாம போடுற பயலுக நிறைய உண்டு…இவனுங்க தான் இந்த மெசேஜ் போடுரவங்கள்லையே ஜாஸ்தி கூட்டம்.கேட்டா,மச்சி நீ இன்னும் mature ஆகணும்னு சொல்றாங்க… முத்துறதுக்கு நான் என்ன முருங்க காயா?

Wednesday ஆனா வுடனே Friday மூடுக்கு போற பசங்களும் நிறைய இருக்கனுங்க…அட இவனுங்க நம்மள பேசி கொல்லாம இருப்பானுங்க… ஆனா statusல….3 days to go…2 days to go…1 day to go…னு என்னவோ ராக்கெட் லான்ச் மாதிரி போடுவானுங்க… இதை எதுக்கு நாம கேக்கணும்னு விட்டுறது… இவனுங்க…மன நிலைமை பாதிக்க பட்ட பசங்க.. ..அது தான் தானாவே பேசிக்க ஒரு வடிகால் தான் இந்த status மெசேஜ் …

Internet…போன்ல வந்தாலும் வந்துச்சு…எப்ப பாத்தாலும் எங்க போனாலும், am here… am there ,am near Beach, starting from beach னு சொல்லுறானுங்க.,…இதனால் யாருக்காவது எதாவது உபயோகம் இருக்கா? ஒன்னுமே கிடையாது…

இன்னும் கொஞ்சம் பசங்க இருகாங்க…’I bought a new apple phone, orange phone, tomato phone’ னு கதை கதையா அளந்து விடுவாங்க..அடுத்த தடவை சந்திக்கும் போது, மச்சி போன் காட்டு னு சொன்ன… செங்கல் சைஸ்ல ஒரு பழைய போன் ஆ காட்டுவாங்க ….கேட்டா… மச்சி இந்த ஹை எண்டு போன் எல்லாம் நமக்கு சரி படாதுனு டகால்டி காட்டுவாங்க …

சரி ரெம்ப பேசிடேனா? நான் status மெசேஜ் போடணும்… only 3 days left for my week end plans…. வரட்டா… ஜூட்

Catch ya later… c ya … take care Bye bye….

Family Head

யாருங்க குடும்ப தலைவி?

ஒரு குடும்பத்த முன் நின்று நடத்துபவர்களா? இல்லை குடும்பம் முன்னேரனும் ‘னு எப்போதும் அயராது உழச்சு கொட்டுறவங்களா?
இல்லை, காலை ‘ல 5:00 மணிக்கு எழுந்து, வாசல் தெளிச்சு கோலம் போட்டு, பில்டர் காபிய கம கம னு குடுக்கிறவங்களா?

கணவனே இல்லாம குடும்பத்த முன் நிறுத்தி கொண்டு போறங்களே அவுங்களா? கணவனை டம்மி பீஸ் ஆ உபயோகம் பண்றவங்களா?

ஏன்டா… இவன் இப்டி பல கேள்விய கேட்டு கொடுமை பண்றான் னு யோசிக்காதீங்க…

உண்மையான குடும்ப தலைவி னு என்னைய உணர வைக்கிறது
பொம்மீஸ் நைட்டீஸ்
னு தேவயாணி TV Ad’s கொடுமை பண்றாளே, அத விட இது ஒன்னும் பெரிய கொடுமை இல்லை.

இப்ப சொல்லுங்க யாருங்க உண்மையான குடும்ப தலைவி!